/* */

நத்தம் அருகே கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

மாணவர்களிடம் அறிவியல் கண்காட்சி முக்கியத்துவம் பற்றி சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தனர்

HIGHLIGHTS

நத்தம் அருகே கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்லூரியில் அறிவியல் கண்காட்சி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டியில் அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வர் ஐசக் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் ஜார்ஜ்பெர்னாட்ஷா,துணை முதல்வர் ஜோசப்லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை தலைவர் சுசித்ரா வரவேற்றார்.இதில் இயற்பியல் தொடர்பான சாதனங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமலிங்கம், மாணவர்களிடம் அறிவியல் கண்காட்சி முக்கியத்துவம் பற்றியும் இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்தால் மூலமாய் மாணவர்கள் எவ்வித தொழில் துறையில் பணியாற்றலாம் உள்ளிட்ட தொழில் தொடர்பான வழிகாட்டுதல் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

பின்னர் அறிவியல் கண்காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை மாணவ மாணவிகள் பேராசிரிகளின் வழிகாட்டுதலின்படி செய்திருந்தனர்.பேராசிரியர்கள் சகாய ராஜன்,காஞ்சனா ஆகியோர் நன்றி கூறினர்.

Updated On: 18 Dec 2021 11:00 AM GMT

Related News