ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மூலிகை செடிகள் நடவு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மூலிகை செடிகள் நடவு
X

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் என்.பி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப்புத்தாண்டு -2022 ஐ முன்னிட்டு மூலிகைச்செடி நடவு செய்யப்பட்டது

நடவு செய்யப்பட்ட மூலிகை செடிகளை நாள்தோறும் பராமரிக்கவும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேசிய நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 20 வகையான மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டது .

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் என்.பி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப்புத்தாண்டு -2022 ஐ முன்னிட்டு , தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மூலிகை தோட்டத்தில் கருந்துளசி, பிரண்டை, பச்சிளை, ஓமவல்லி, தூதுவளை மற்றும் ஆடாதொடை உள்ளிட்ட 20 வகையான மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன் மூலிகை செடிகள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், பாதுகாப்பது குறித்தும், மூலிகைச்செடி வளர்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நடவு செய்யப்பட்ட மூலிகை செடிகளை நாள்தோறும் பராமரிக்கவும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் என்பிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், விசித்திரா மற்றும் பேராசிரியர்கள்,தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவ,மாணவிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!