நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

நத்தத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

நத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நத்தம் வட்டார தலைவர் ராமநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.9.000 வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு பணிக்கொடை ஒட்டுமொத்த தொகை என்ற பெயரால் அமைப்பாளருக்கு ரூ.1 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமாகவும், சமையலர், சமையல் உதவியாளருக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

ஓய்வுபெறும் வயதை சத்துணவு அமைப்பாளர்களுக்கு 60 வயதிலிருந்து 62 வயதாகவும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 58 வயதிலிருந்து 60 வயதாகவும் உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் செயலாளர் கந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் சுரேஷ், ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரபாண்டி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா