நத்தம்: நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி பாெதுமக்கள் சாலை மறியல்
நத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் உள்ளது சேர்வீடு கிராமம். இந்த கிராமத்திற்கான விலக்குப்பாதையானது நத்தத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் உள்ளது. இந்த விலக்குப்பாதையிலிருந்து சாலையானது அப்பகுதியில் உள்ள சேர்வீடு, துவராபதி, ஆத்திப்பட்டி, கைப்பையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலையானது சேர்வீடு கிராமத்திற்குள் செல்லும் சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் தாங்கள் பாதுகாப்பாக தங்கள் பகுதிக்கு வாகனங்களில் சென்று வர நான்கு வழிச்சாலையில் பெரியபாலம் அமைக்க சம்மந்தப்பட்ட துறையினருக்கும் மற்றும் பல்வேறு அலுவலர்களுக்கும் கோரிக்கை மனுச் செய்துள்ளனர். ஆனால் சிறிய பாலம் அமைக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென நத்தத்திலிருந்து சேர்வீடு செல்லும் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் போலீசார்கள் அலுவலர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு கிராம பொதுமக்களிடம் கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu