தை மாத திருவிழா: அதிர்வேட்டுகள் முழங்க நகர்வலம் வந்த நத்தம் சந்தனகருப்பு சுவாமி
அம்மன்குளத்தில் சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தது
தை மாத திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரண்மனை சந்தனகருப்பு சுவாமி அதிர்வேட்டுகள் முழங்க நகர்வலம் வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரம்- எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவிலில் தைத்திருவிழா நடந்தது.கடந்த மாதம் 12-ம் தேதி பிடிமண் கொடுத்தலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் கொடியேற்றம், தோரணமரம் ஊன்றுதல் விழா நடந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் அம்மன்குளத்தில் சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தது. இதில் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.முன்னதாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் நகர் பொதுமக்களும், மறவர் சமுதாய இளைஞர் அணியினரும் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu