நத்தம் அருகே புதிய கிறிஸ்தவ தேவாலயம் அர்ச்சிப்பு விழா: திரளானோர் பங்கேற்பு

நத்தம் அருகே புதிய கிறிஸ்தவ தேவாலயம் அர்ச்சிப்பு விழா: திரளானோர் பங்கேற்பு
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியம், வேம்பார் பட்டியில்  நடந்த புதிய கிறிஸ்தவ தேவாலய திறப்பு விழா.

இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த மும்மத தலைவர்களும் கலந்து கொண்டனர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியம், வேம்பார் பட்டியில் புதிய கிறிஸ்தவ தேவாலய திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த மும்மத தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும் நத்தம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆர் .வி. என்.கண்ணன், அமர்நாத் ஆகியோர் இணைந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!