நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் உயிரிழப்பு

நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர்  உயிரிழப்பு
X
ஜெனரேட்டரை இயக்க சென்றபோது மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டியைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் நத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.இன்று காலை மின்சாரம் தடை ஏற்பட்டதையடுத்து ஜெனரேட்டரை இயக்க சென்றுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture