நத்தத்தில் சாலையில் நடந்த ஆட்டு சந்தை, காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்
நத்தம் ஆட்டுச் சந்தையில் கொரோனா விதி முறைகளை மீறி கூடிய கூட்டம். ஒருவர் கூட முக கவசம் அணியவில்லை.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் வாரவாரம் ஆட்டுசந்தை ஞாயிற்றுக்கிழமை நடப்பது வழக்கம்.
இச்சந்தைக்கு தேனி,திருப்பூர்,கரூர், திருச்சி,சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆடு வாங்குவதற்காக வருவார்கள். பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெறும். ஆனால் கொரோனா பெரும்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 80 நாட்களாக நடைபெறாமல் இருந்தது.
இன்று காலை திடீரென நத்தம்- திண்டுக்கல் சாலை யூனியன் அலுவலகம் அருகே ஆடு விற்பனையாளர்கள், வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் முகக் கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும் திடீரென சாலையில் கூடி ஆடு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறையாக ஆட்டு சந்தை நடப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu