ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
X

  மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக்கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம்பட்டியில் செட் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இப்பகுதியில் செட் அமைப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை அடுக்கி வைத்திருந்திருக்கிறார். காலை தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக் கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் திருகோள்நாதர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளுக்கு இடையே மறைந்திருந்த 3 நல்ல நல்லபாம்புகளை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!