நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
X

தீத்தடுப்பு ஒத்திகையில் தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவுறுத்தலின்படி, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பயிற்சி வழங்கினார்.

இதில் மழை,வெள்ளம் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, தீ விபத்தின் போது தற்காத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் விஜயலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அண்ணாமலை, மண்டல துணை வட்டாட்சியர் மாயழகன், வட்டார வழங்கல் அலுவலர் டேனியல், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வேலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!