நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு

நத்தம் அருகே பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு
X

பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். 

நத்தம் அருகே, தொடக்கப்பள்ளி சத்துணவுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது; உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி, பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது, 2 கட்டிடங்களில் செயல்படுகிறது . இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, நேற்று பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

அப்போது, சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டர் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நத்தம் தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சத்துணவு மையத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.

துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் நாளே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!