வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு

வீட்டில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்பு
X

நத்தம் அருகே வீட்டில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பு

நத்தம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் இவர் தனது வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இன்று வீட்டு சுற்று சுவர் அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் 4 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai marketing future