நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் போலி டாக்டர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நத்தம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை தலைமையில் நத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், சுகாதார துறையினர் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக, சிறுகுடியில் குமார் (42), கோட்டையூரில் மதினா (32), நத்தத்தில் முருகேசன் (62), சாந்தி (55) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!