நத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை : பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை : பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளியின் உறவினர்கள்

பணிடாக்டர் குறித்து பதில் கிடைக்காததால் உறவினர்களும் பொதுமக்களும் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது பணி டாக்டர் இல்லை என குற்றம்சாட்டி மருத்துவமனை முன்பு உறவினர்கள் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் முஸ்லீம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சாஜிதா பீவி(65) என்பவருக்கு திடீரென உடல நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் நத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அப்போது அங்கு செவிலியர் மட்டுமே சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். அப்போது பணியிலிருக்கும் டாக்டர் குறித்தும். நோயாளிக்கு சிகிச்சையளிக்க டாக்டர் ஏன் வரவில்லை எனவும் அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணிடாக்டர் குறித்து முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் நத்தம் பஸ்நிலையத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தாசில்தார் சுகந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடினர். அப்போது இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் வரும் போது பணி டாக்டர் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.அவரும் நோயாளிகளின் சிகிச்சையின் அவசரத்திற்கேற்ப பணி செய்ய செய்யமுடியாமல் அவதி அடையும் நிலை உள்ளது.

இதைதொடர்ந்து மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் கவிதாவிடம் சென்று விசாரித்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சாஜிதா பீவியை கொண்டு வரும்போது மகப்பேறு பிரிவில் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும். அதை முடித்துவிட்டு வந்து நான் அவசர சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட சாஜிதா பீவிக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு மருத்துவமனை என்பதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக சுற்று வட்டாரத்தை சேர்ந்த இப்பகுதியைச் சேர்ந்தோர் அதிகமானோர், இங்கு வருவதால் இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவரை நியமித்து சிகிச்சையளிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து மருத்துவத்துறையினரிடம் பேசி நடவடிக்கை எடுக்க மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறியதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது. சாலை மறியலால் நேற்று இரவு 8 மணிமுதல் 8.20 வரை நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது