திண்டுக்கல்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல வண்ண மண் பானைகள் விற்பனை

திண்டுக்கல்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல வண்ண மண் பானைகள் விற்பனை
X

திண்டுக்கல் நகரில் விற்பனைக்கு வந்திருந்த பல வண்ண மண்பானைகள்

வண்ணம் தீட்டிய மண் பானைகள் கவனத்தை ஈர்ப்பதால் கிராமத்தினர் மட்டுமின்றி நகர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

திண்டுக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல வண்ண மண் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல வண்ண மண் பானைகள் விற்பனைக்கு வரத்து வங்கியுள்ளன. திண்டுக்கல் சந்தை ரோடு, நத்தம், கோபால்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு மானாமதுரையில் இருந்து விற்பனைக்காக பொங்கல் பானைகள் அதிகளவில் வந்துள்ளன.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கலுக்கு இன்றும் பாரமபரிய மண் பானை பயன்பாடு உள்ளது. குறிப்பாக கிராமங்களில் மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தப்படுகிறது.வண்ணம் தீட்டிய பானைகள் அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் 450 வரை, வண்ணம் தீட்டாத பானைகள் ரூ.150 முதல் ரூ.350 வரை, ஒற்றை மண் அடுப்பு ரூ.200 முதல் ரூ.350 வரை, இரட்டை மண் அடுப்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.வண்ணம் தீட்டிய மண் பானைகள் கவனத்தை ஈர்ப்பதால் கிராமத்தினர் மட்டுமின்றி நகர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மண் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் எதிர்பார்த்த அளவுக்கு மண்பாண்ட பொருட்கள் விற்பனை இல்லை. வேறு வழியின்றி நாங்களும் பானை விலையை உயர்த்தியுள்ளோம். பொங்கலுக்கு வண்ணம் தீட்டிய மண் பானையையே மக்கள் விரும்புகின்றனர். பொங்கல் நெருங்கி வருவதால் வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கலாம் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்