நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதிகளான கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டி பகுதிகள் சுகாதார துறையினரால் கொரோனா தொற்றுள்ள பகுதிகளாக அறிவிக்கபட்டு தனிமைப்படுத்தபட்டுள்ளது.

இந்த பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலெட்சுமி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதிகளில் எடுக்கபட்ட முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு துரைக்கமலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா,செயல் அலுவலர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட சுகாதார, பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்