நத்தம் அருகே கோபால்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

நத்தம் அருகே கோபால்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
X

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்று வாழ்த்திய மக்களவை  திமுக உறுப்பினர் வேலுச்சாமி

பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்தப்பொறுப்பில் தலா 500 ரூபாயை 200 தாய்மார்களுக்கு வழங்கினார்

நத்தம் அருகே கோபால்பட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோபால்பட்டியில் பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, வளையல், அணிவித்தனர் தொடர்ந்து அனைத்து தாய்மார்களுக்கும் தாம்பூல தட்டில் சேலை, குங்குமம், சந்தனம் ஆகியவை அடங்கிய பரிசுப்பொருட்களை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி வழங்கினார்.இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்தப் பணம் 500 ரூபாயை 200 தாய்மார்களுக்கு வழங்கினார். பின்பு அனைவருக்கும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!