நத்தம் அருகே கோவில் சர்ச்சையால் இருதரப்பினரிடையே மோதல்: 23 பேர் மீது வழக்கு
நத்தம் அருகே கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்- 23 பேர் மீது வழக்கு பதிவு.
நத்தம் அருகே கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்- 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 3 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது மூங்கில்பட்டி கிராமம். இங்கு முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு தரப்பினர் எங்களுக்கும் கோவிலில் மரியாதை வேண்டும் என கேட்டுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் ஊர் பாரம்பரியத்தை மாற்றி அமைக்க முடியாது. ஏற்கனவே உள்ளவர்களுக்கு மட்டுமே மரியாதை செய்யப்படும் என மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக நேற்று இரவு சத்தியராஜ் (28) தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், வேல்முருகன் (40) தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
அதன்பேரில் தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாண்டியன் உள்ளிட்ட போலீசார்கள் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக 23 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 3 சிறுவர்கள் உள்டட சத்தியராஜ்(28), சுப்பிரமணி(47), பாண்டியராஜன்(38), மணிராஜா (26), ராஜீவ்காந்தி(43), சரவணன், (24), மோகன்ராஜ்(23), வேல்முருகன்(40), வேணுகோபால்(18), வீரபாகு(37) உள்ளிட்ட 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பதற்றமாக இருப்பதால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu