பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X
தமிழக அரசுபெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ்நிலைய ரவுண்டானா முன்பு பாஜக விவசாய அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் விஜயராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தனபாலன், விவசாய அணி துணை தலைவர் செல்வராஜ்,மண்டல விவசாய அணி தலைவர்கள் ராஜா, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அழகுமணி, மாவட்ட விவசாய அணி பார்வையாளர் சசிகுமார், மண்டல தலைவர்கள் சுதாகர், வெள்ளையன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!