நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டத்துப்பாக்கி.

நத்தம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு புதூர் பகுதியை சேர்ந்த அழகர் மகன் சின்னாண்டி (40). நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் நத்தம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனைக்கு பின் சின்னாண்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுதுப்பாக்கி மற்றும் துப்பாக்கி கைப்பிடியை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்டுவதற்காக மலையூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாக சின்னாண்டி கூறினார். இதையடுத்து சின்னாண்டியை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai business transformation