தமிழக முதல்வருக்கு பேனர் வைத்த அரியர் பாய்ஸ்

தமிழக முதல்வருக்கு பேனர் வைத்த அரியர் பாய்ஸ்
X

நத்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள் என பேனர் வைத்து இளைஞர்கள் ஆதரவு குரல் எழுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :தற்போது திமுகவின் நிலைமை பரிதாபமாக உள்ளது. 2015 ல் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என திமுகவிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.நத்தத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனுமதி பெற்று நத்தம் பகுதியில் மலை கிராமங்களுக்கு தார் சாலை அமைக்கப்படும்.நொச்சிஓடைபட்டியில் நீர்த்தேக்கம் அமைக்கும் .நத்தம் நகரில் மின்மயானம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் கூட்டத்தில் சிக்கியது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கள் என சொன்னார். உடனே அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வழி விட்டனர்.இதனால் சிறிது நிமிடங்கள் பரப்புரை தடைபட்டது. ஆம்புலன்சுக்கு வழி விட்டதால் அங்கிருந்த மக்கள் கைதட்டி,விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.முதல்வர் நத்தத்தில் பரப்புரை செய்யும் போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள் என பேனர் வைத்து ஆதரவு குரல் எழுப்பினர்.

.

Tags

Next Story
ai future project