அதிமுக உட்கட்சி தேர்தல்: நத்தத்தில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக உட்கட்சி தேர்தல்: நத்தத்தில்  ஆலோசனைக் கூட்டம்
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அத்தொகுதி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமாகிய நத்தம் விசுவநாதன் தலைமை வகித்தார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உட்கட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-வேலம்பட்டி அம்மா திருமண மண்டப வளாகத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமாகிய நத்தம் விசுவநாதன் தலைமை வகித்தார்.

ஒன்றிய குழு தலைவர் கண்ணன், நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன்,ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரவிருக்கும் அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியினரிடையே விவாதிக்கபட்டது. இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயபாலன்,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி,வேலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், அவைத் தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, நகர்பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை கழக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது