நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா

நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா
X

நத்தம் கைலாசநாதர் கோயில் நந்திக்கு நடைபெற்ற பிரதோஷவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத சனி மஹா பிரதோஷ விழா கோயில் ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தது. இதனையொட்டி நந்தி சிலைக்கு பால்,பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர், மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விழாவையொட்டி சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவில் முன்பாக நெய் விளக்கேற்றி சாமியை வணங்கி சென்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்