நத்தம் அருகே பருத்தி தோட்டத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

நத்தம் அருகே பருத்தி தோட்டத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு
X

பிடிபட்ட மலைப்பாம்பு.

நத்தம் அருகே அம்மாபட்டியில் பருத்தி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அம்மாபட்டியில் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான பருத்தி தோட்டத்திற்குள் சுமார் 6அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நத்தம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் பொறுப்பு லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி மலைபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி