35 வது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி: சென்னை அணி சாம்பியன்

35 வது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி: சென்னை அணி சாம்பியன்
X

திண்டுக்கல்லில் நடந்த மாநில தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி

இப்போட்டியில் இறுதி நாளான இன்று 361 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் 35வது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச்சென்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் 35 வது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றனர் இப்போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இறுதி நாளான இன்று 361 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது .

கோயம்புத்தூர் அணி 266 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது . வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாநில தடகள சங்க துணைத்தலைவர் கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் மற்றும் நத்தம் எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.போட்டியில் மாநில தடகள சங்க செயலாளர் லதா இணைச்செயலாளர் உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கச் செயலாளர் சிவக்குமார் செய்தார்.

மொத்தம் 132 போட்டிகளில் 8 (குண்டு எறிதல் நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100, 500, 1000 மீட்டர் ஓட்டப் பந்தயம்) போட்டிகளில் மாநில அளவிலான சாதனை நிகழ்த்தப்பட்டது .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்