நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்
X

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர், சந்தனம்,ஜவ்வாது,மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் நத்தம், கோவில்பட்டி, சிறுகுடி,வத்திப்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது