நத்தத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது

நத்தத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது
X

திண்டுக்கல், ஜூன்.18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார பகுதியில் மருத்துவம் படிக்காமல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குநர் சிவக்குமாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, நத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தங்கதுரை தலைமையில் , போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் செந்துறை, மணக்காட்டூர் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, செந்துறை பகுதியில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. சோதனையில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவம் வந்த அக்கியம்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரை கைது செய்தனர். அதேபோல் மணக்காட்டூர் பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த வனிதா என்பவரும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து வனிதாவை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மருந்துகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!