டெல்டா பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி
திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் கொரோனா நிதி ரூ 4ஆயிரமும், 14 வகை மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எம்பி, எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதிகள் எங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களோ அங்கெல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும், கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை கடந்த காலத்தில் ஐந்து நாள் 6 நாள் காத்திருந்து உள்ளனர். இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்றும். 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அந்த பணத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் மழைக்காலத்தில் நெல் சேதாரம் ஆகாமல் இருக்க சைலோ முறையை கொண்டு வந்து நவீன அரிசி ஆலைகள் தொடங்கப்படும். மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும் அதேபோல் எடையும் சரியாக இருக்க வேண்டும். விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என உணவுத் துறைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் விவசாயம் நலன் பாதுகாக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 9 லட்சம் பேர் குடும்ப அட்டை வைத்துள்ளார்கள் அவர்களுக்கு வேண்டிய தரமான அரிசி வழங்கப்படும். டெல்டா பகுதியில் கேட்கிற இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu