நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா தொடக்கம்
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் யாக பூஜையுடன் மேளதாளம் முழங்க மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ணமலர்களாலும் நாணல்புல், மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


நாளை செவ்வாய்க்கிழமை 16ம் தேதி காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து கோவிலில் மஞ்சள்காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் நகர்வலம்வரும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2–ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். 3–ந்தேதி பூப்பல்லக்கு விழா நடைபெறும்.

Next Story
future ai robot technology