திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள வீரப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சின்னகாளை (47). இவர் , விவசாயி ஆவார். நேற்று காலை வீட்டின் எதிர்புறம் உள்ள கருப்பண்ணசாமி கோவில் பின்புறம், காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, கன்னிவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

இதேபோல், சாணார்பட்டி கே. மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியதம்பி (65) என்பவர், வீட்டில் தலையில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Tags

Next Story