உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை திமுக வெற்றி பெற்றதாக அறிவித்து மோசடி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை திமுக வெற்றி பெற்றதாக அறிவித்து மோசடி
X
உள்ளாட்சி தேர்தலில் கிராமமக்களை ஏமாற்றி அதிமுக வெற்றி பெற்றதை திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தது மாயை ஏற்படுத்தியுள்ளனர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப் புறமக்களை ஏமாற்றி அதிமுக வெற்றி பெற்றதை திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தது மாயயை ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

டன் ஆலோசனை கூட்டத்தில் காட்டமான பேச்சு. மேலும் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 10 -க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி .சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாநகராட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஐந்தாவது நாளாக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் , எம் ஜி ஆர் கட்சி துவங்கி ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி கண்ட தொகுதி திண்டுக்கல் . தற்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புறமக்களை ஏமாற்றி அதிமுக வெற்றி பெற்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தது மாயையை ஏற்படுத்தியுள்ளனர். ஓட்டு போடும் இடத்தில் இருந்து ஒட்டு எண்ணும் வரை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றார்.

முன்னதாக எட்டாவது வார்டு பகுதியில்ஐம்பதாம் ஆண்டு பொன் விழா கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் எட்டாவது பகுதியில் உள்ள திமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 10 -க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி .சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்சியில் மாநில அமைப்புச் செயலாளர் மருதராஜ், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் ,நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்..

Tags

Next Story
Weight Loss Tips In Tamil