மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை
மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல், கோபாலசமுத்திர கரையில் அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில், 32 அடி உயரம், 120 டன் எடையுள்ள ஒரே கல்லினால் ஆன அருள்மிகு மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் அமைந்துள்ளது. இன்று ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நன்மை தரும் 108 விநாயகர் திருகோவில் அமைந்துள்ள மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, அன்னம் என 16 வகை அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். பிறகு ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்னர். பல சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபால சமுத்திர கரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அருள்பாலித்து வருபவர் ஆதி விநாயகர். 2002-ம் ஆண்டு இவ்விநாயகரிடம் திருவுளசீட்டு மூலம் ஆசிபெற்று இங்கு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்ற இக்கோவில் 108 விநாயகரும், மூல விநாயகரின் இருபுறமும் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 108 விநாயகருக்கும் நமது கரங்களின் மூலம் அபிஷேகம் செய்து நமக்கு வேண்டியதை பெறலாம் என்பது இக்கோயிலின் தனி சிறப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu