திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலை அகற்றம்; அதிகாரிகளை மிரட்டிய திமுகவினர்

திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலை அகற்றம்; அதிகாரிகளை மிரட்டிய திமுகவினர்
X

திருவள்ளுவர் சிலையை அகற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள்.

திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றிய அதிகாரியை திமுகவினர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டி நெடுஞ்சாலைக்கு செந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மேடை அமைத்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென நேற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் வெண்கலத்திலான அய்யன் திருவள்ளுவர் சிலையை வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம். இங்கு சிலை வைக்க அனுமதி கிடையாது என அங்கு கூடியிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சிலையை அகற்ற ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் சிலையை அகற்ற விடாமல் திமுகவினர் நெடுஞ்சாலை அதிகாரிகளை மிரட்டத் துவங்கினர்.

உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு அதிகாரிக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ai in future agriculture