தண்டவாள உறுதித்தன்மை: பாலக்காடு வரை 110 கிமீ வேகத்தில் ரயில் இயக்கி சோதனை

தண்டவாள உறுதித்தன்மை: பாலக்காடு வரை 110 கிமீ  வேகத்தில் ரயில் இயக்கி சோதனை
X

திண்டுக்கல்லில் இருந்து பாலக்கோடு வரை இருப்புப்பாதை உறுதித்தன்மையை ஆய்வு செய்ய இயக்கப்பட்ட  ரயில்

இந்த சோதனையின்போது ரயில் தண்டவாளத்தில் உள்ள அதிர்வுகள் தானியங்கி கணினி மூலம் பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு வரை ரயில் தண்டவாள உறுதித்தன்மை குறித்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் மாதம் தோறும் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில் தண்டவாளத்தில் உறுதித்தன்மை அவ்வப்போது பொறியாளர் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு ரயில் நிலையம் வரை உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரே தன்மை குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்ட உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் இன்று காலை ஆய்வைத் தொடங்கினர்.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் ரயில் தண்டவாளத்தில் 110 கிலோ மீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர்.இந்த சோதனையின்போது ரயில் தண்டவாளத்தில் உள்ள அதிர்வுகள் தானியங்கி கணினி மூலம் பதிவு செய்யப்பட்டது.அதன்படி ஏதாவது உறுதி தன்மையும் குறைபாடு இருந்தால் அதை பராமரிப்பு செய்து மாற்றி அமைத்த இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்