நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதால் பொதுமக்கள் அவதி

நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதால் பொதுமக்கள் அவதி
X

நியாய விலைக் கடைகளில் கைரேகை இயந்திரம் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதி.

கடந்த ஒரு மாதமாகவே திண்டுக்கல் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் சரிவர இயங்குவதில்லை என கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடைகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மாதமாதம் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டையை நியாயவிலைக் கடைக்காரரிடம் கொடுத்து தங்களது கைரேகைகளை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் நியாயவிலை கடை ஊழியர்கள் பொருட்களை வழங்குவார்கள்.

இந்நிலையில் இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர இயங்காததால் பொருட்கள் வாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் நியாயவிலை கடைகளுக்கு வந்து செல்வதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து நியாய விலை கடை ஊழியர்களிடம் கேட்டால், இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்றும், உங்களது ஸ்மார்ட் கார்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சரிசெய்து வாருங்கள் என்று கூறுகின்றனர்.

மேலும் உணவு வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வைரஸ் தொற்று காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழ்நிலையில் முதியவர்களை இதுபோன்று அழைப்பு செய்வதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக என்றும் கூறினார்.

நியாய விலை கடை ஊழியரிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதமாகவே திண்டுக்கல் முழுவதும் பயோமெட்ரிக் இயந்திரம் சரிவர இயங்குவதில்லை. குறிப்பாக முதியவர்கள் வரும்போது தான் அதிக அளவில் இந்த பிரச்சனை வருகிறது. அதிகாரிகளாலும் நாங்கள் பலமுறை புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி