அம்மா உணவகத்தில் உணவு இல்லாமல் பொதுமக்கள் திரும்பிச் செல்லும் அவலம்

அம்மா உணவகத்தில் உணவு இல்லாமல் பொதுமக்கள்   திரும்பிச் செல்லும் அவலம்
X

திண்டுக்கல் அம்மா உணவகத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை

அதிகாரிகளின் அலட்சிய போக்கால் எரிவாயு சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்காததால் மக்கள் பசியுடன் திரும்பிச் சென்றனர்

திண்டுக்கல் அம்மா உணவகத்தில் உணவு இல்லாமல் பொதுமக்கள் பசியாற முடியாமல், பட்டினியுடன் திரும்பிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஏழை எளிய மக்கள் கூலி தொழிலாளிகள் பசியில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , மாநிலம் முழுவதும் குறைந்த விலையில் உணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று காலை, மதியம் என இரு வேளையும் குறைந்த செலவில் பசியை போக்க வந்த மக்கள் அம்மா உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் இல்லாத காரணத்தால் சமையல் செய்யவில்லை என அம்மா உணவக ஊழியர்கள் கூறியதால், சாப்பிடுவதற்காக வந்த பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் பசியாற முடியாமல் பட்டினியுடன் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

மேலும், சமைப்பதற்கு தேவையான அரிசி, பருப்பு தண்ணீரில் ஊர வைத்துள்ள நிலையில், காய்கறிகள் வெட்டி வைத்துள்ள நிலையில் எரிவாயு சிலிண்டர் வராததால் ஏனைய பொருட்களும் வீணாகும் நிலை ஏற்பட்டளது. ஏழை எளியமக்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் பசியை போக்க அ தி மு க அரசால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது, திமுக ஆட்சியில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் எரிவாயு சிலிண்டர் இல்லாமல் உணவு சமைக்க முடியாததால் மக்கள் பசியுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags

Next Story