திருக்கோவிலின் வாசலை மூடுதல் முறையோ?: வருத்தத்தில் மணமக்கள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டிய கேட்டின் முன் நின்று தாலி கட்டிக் கொண்ட மணமக்கள்
தமிழக அரசு நோய் தொற்று காலம் என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆலயங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் முதல் முகூர்த்தம் என்பதால் திருமண வைபவங்கள் இன்று பெரும்பாலான இடங்களில் மண்டபங்களில் நடைபெற்றது.
ஒரு சிலர் கோவில்களில் நடத்த திட்டமிட்டுருந்த நிலையில் அரசின் மூன்று நாள் ஆலயங்கள் திறக்கக் கூடாது என்ற அறிவிப்பால் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டு இருந்த கேட்டின் முன் நின்று உறவினர்கள் புடைசூழ மிகவும் எளிமையாக மணமக்கள் தாலி கட்டிக் கொண்டனர்.
கோவில் பூட்டப்பட்டு இருந்த நிலையில் நடைபெற்ற இந்த திருமணம் பக்தர்கள், பொது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் டாஸ்மாக் உள்ளிட்ட பல கடைகள் திறந்துள்ள நிலையில் ஆலயங்களை மட்டும் பூட்டி வைப்பது எந்த விதத்தில் நியாயம். உடனடியாக பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu