திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
X

திண்டுக்கல்லில் பிளஸ்௨ தேர்வு முடிவுகள் வெளியானவுடன் வெற்றி பெற்ற மாணவிகள் மகிழ்ச்சியில்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை 21122 ஆகும். இதில் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 212, அதில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 86 அதில் மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை 8338 அதில் ஆண்கள் 3910, பெண்கள் 4428 பேர் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 50 அதில் மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை 8004 ஆகும். அதில் 3435 ஆண்களும்,4569 பெண்களும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மெட்ரிக் மற்றும் சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 76 அதில் மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை 4780 ஆகும். அதில் 2589 ஆண்களும், 2191 பெண்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 122 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களுக்கே குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் சில மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தாங்கள் பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.

தேர்வு எழுதாமல் ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பிளஸ்-2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.


Tags

Next Story
பொட்டுக்கடலை..தினமும் ஒரு கைப்பிடி சாப்டுங்க..!அவ்ளோ நன்மைகள் இருக்கு அதுல!