தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பக்தர்கள்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பக்தர்கள்
X

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படும் காட்சி.

ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி குரும்பரின மக்கள் தேங்காயை தலையில் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை-வலையப்பட்டியில் குரும்பாரின மக்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து, சுமார் 300 ஆண்டுகளாக கோவில் திருவிழாவில் தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் குரும்பாரின மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்கின்றனர். அவ்வாறு பிரார்த்தனைகள் நடந்தவுடன் வருடா வருடம் மஹா சிவராத்திரிக்கு மறுநாளில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் 50க்கும் மேற்பட்டோருக்கு கோவில் பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோவை, உடுமலை மற்றும் பல்வேறு மாநிலமான கர்நாடகா , ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil