ஏரி குளங்களில் சிறுவர்-சிறுமிகள் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கட்டுகள் ,தடுப்பு அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ள நிலையில், சிறுவர்-சிறுமிகளை இவற்றில் குளித்து விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக விட்டு விட்டு பெய்து வருகிறது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமான மழை பொழிவு காரணமாக அதை ஒட்டியுள்ள பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.பெரும்பாலான அணைக்கட்டுகள் நிறையும் தருவாயில் உள்ளது ஒருசில அணைகள் நிறைந்து மறுகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் ஆறுகளில் சென்று ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பி வருகிறது .
இதன்காரணமாக அணைகள் அணைக்கட்டுகள் தடுப்பணைகள் ஏரிகள் குளங்களில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது இந்த தண்ணீரில் மாணவ மாணவிகள் விடுமுறை நாளை பயன்படுத்தி குளித்து விளையாடி வருகின்றனர்.தடுப்பணைகள் ஏரிகள் குளங்களில் ஆறுகளில் நீரின் தன்மை தெரியாமலும் ஆழம் தெரியாமல் மாணவ-மாணவிகள் சிக்கிக்கொண்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்களது மேற்பார்வையில் இருந்தாலும்கூட, பாதுகாப்பற்ற முறையில் குளித்து விளையாட அனுமதிக்கக் கூடாது. தற்போதைய மழைக்காலத்தில் உயிர்ச் சேதங்கள் இல்லாமல் இருப்பதற்கு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பேரிடர் ஏற்பட்டால் அதற்காக மீட்புப் படை தீயணைப்புத்துறை யுடன் சேர்ந்து காவல்துறையின் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu