திண்டுக்கல் அருகே சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., திறந்து வைப்பு

புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாடு அறையை திறந்து வைத்த எஸ்பி., ஸ்ரீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் போக்குவரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாடு அறையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ருரல் ஏஎஸ்பி., அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், தாடிக்கொம்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்ச் செல்வி, ஜலால் முகமது, அனிதா மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu