அவசரகதியில் தரமற்ற தார் சாலை அமைக்கக்கூடாது: புறக்கணிக்கப்படும் அரசு அறிவிப்பு

அவசரகதியில் தரமற்ற தார் சாலை அமைக்கக்கூடாது: புறக்கணிக்கப்படும் அரசு அறிவிப்பு
X
தார் சாலை அமைக்கும்போது பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைக்காத ஒப்பந்ததாரர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அவசரகதியில் தரமற்ற தார் சாலை அமைக்கக்கூடாது என்ற தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் காற்றில் பறக்க விட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக நாயகர் மேம்பாலத்தில் இருந்து நகர் பகுதி வழியாக தார்சாலை இரவும் பகலும் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த தார்சாலையானது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதால், தார்சாலை அமைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே பெயர்ந்து விடுகிறது . தரமற்ற தார் சாலையை அமைப்பது பற்றி, பொதுமக்கள் இவர்களிடம் கேட்டால், நாங்கள் அப்படித்தான் தார்சாலை அமைப்போம் என்று கூறுகிறார்.

ஆனால், தமிழகத்தில் புதிய அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற இறையன்பு கூறும்போது, தமிழகம் முழுவதும் தார் சாலை அமைக்கும் பொழுது பழைய தார் சாலைகளில் முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்க த ஒப்பந்தகாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தற்போது பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் தார்சாலை பழைய தார் சாலைகளை அகற்றாமல் , அவசரகதியில் ஒப்பந்தக்காரர் இரவும் பகலும் ஆட்களை வைத்து தரமற்ற முறையில் சாலையை அமைத்து வருகிறார் .தற்போது போடப்படும் ,தார்சாலை ஒரு மாதத்திற்கு கூட தாங்காது. இனிவரும் நாட்கள் மழை காலம் என்பதால், தற்போது பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் இந்த தார்சாலை, மிகவும் மோசமாகவும், அதேபோல் பழைய தார்சாலை மீது அப்படியே அமைக்கப்படுகிறது.

அரசு அறிவித்த சரியான அளவில் சாலை அமைக்கப்படவில்லை. தற்போது புதிதாக அமைக்கப்படும் தார்சாலையால் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் . மேலும், காலையில் போடப்பட்ட தார்சாலை சரியாக போடாத காரணத்தினால், குடிநீர் குழாய் உடைந்து புதிய தார்ச் சாலையை துளையிட்டு தண்ணீர் வெளியேறி ஆறுபோல் ஓடுகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்போது அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை உடனடியாக அகற்றி விட்டு, சாலையை பெயர்த்து எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Tags

Next Story