புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: ஆட்சியர்  வேண்டுகோள்
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. விசாகன்

கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

திண்டுக்கல்லில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் ஆட்சியர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில், தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,கொரோனா நோய்த்தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஒமைக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்றது.

இந்த சூழ்நிலையில் நோய்த்தடுப்பு பணிகளை மேலும், கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், மற்றும் இதர இடங்களில் 31.12.2021 இன்று இரவு நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story