திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 777 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 777 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்
X

திண்டுக்கல் கலெக்டர் விசாகன் 

திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை 777 இடங்களில் நடத்தப்பட உள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கினை அடைவதற்கு ஏதுவாக தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 16வது முறையாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை 777 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்