கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழை

கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழை
X

கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் தற்போது நடப்பது இரண்டாவது கோடை காலமா என ஐயம் கொள்ளும் வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலின் கொடுமைக்கு மலைகளினி இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலும் விதி விலக்கல்ல.

கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மலைப்பகுதியில் மழை இல்லாததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் வனப்பகுதியிலும் வறட்சி நிலவியதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வந்தன.

இதனால் அருவி பகுதிகளில் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் முகாமிட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் அவ்வப்போது பகல், இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது . இன்று காலை முதல் நகர் பகுதிகளான நாயுடுபுரம் , ஏரிச்சாலை , அண்ணா சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது. மாலை வேளையில் சாரலாக தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக பிரதான சாலைகள் முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடு த்து ஓடியது . திடீரென வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இயற்கை அழகை ரசிப்பதற்காக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business