திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் தங்கப்பத்திரம் விற்பனை துவங்கியது
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் தங்கப்பத்திரம் விற்பனை துவங்கியது.
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி வரை தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
இந்த பத்திரம் 8 ஆண்டுகளுக்கு முதிர்வடையும். அந்த சமயத்தில் பணமாக மாற்ற பிறகு விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு பின் மார்க்கெட் நிலவரப்படி தொகையை பெற்றுக்கொள்ளலாம். தங்கப்பத்திரம் முதலீட்டிற்கு 2.5 சதவிகித வட்டி முதலீட்டாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். 1 கிராம் தங்கப்பத்திரம் ரூ.4786 ஆகும். ஒரு நபர் அதிக பட்சம் 4 கிலோ தங்க நகைகளை முதலீடு செய்யலாம். முதலீட்டாளருக்கு அவசர தேவை ஏற்பட்டால் தங்கப்பத்திரத்தை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெறலாம். மேலும் வங்கிக் கணக்கு எண் ஐ.எப்.எஸ்.சி. கோடு அவசியம்.வாரிசுதாரரின் வயது, வங்கிக்கணக்கு எண், அடையாள அட்டை, சான்று ஆகியவை தேவை வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை அடையாள சான்றாக வைத்து தங்கப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என்று தபால் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu