திண்டுக்கல் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: எண்பது லட்ச ரூபாய் வரை விற்பனை

திண்டுக்கல் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: எண்பது லட்ச ரூபாய் வரை விற்பனை
X

திண்டுக்கல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஆடுகள் 

திண்டுக்கல் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் ஆடி18 திருவிழா வருவதால் ஆடு விற்பனை அமோகம் சுமார் எண்பது லட்ச ரூபாய் வரை விற்பனை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வார வாரம் திங்கட்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம் .இந்த சந்தைக்கு திண்டுக்கல் சுற்றுப்புறங்களில் உள்ள வெள்ளோடு, கொடைரோடு, நிலக்கோட்டை ,நத்தம் கோபால்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் போன்றவைகள் விற்பனைக்காக வரும். அதேபோல் வாங்குவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி மட்டுமல்லாமல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் வரும் 21ம் தேதி பக்ரீத் மற்றும் ஆடி 18 திருவிழா வருவதால், இன்று அதிக அளவில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்பட்ட ஆடுகளை வாங்குவதற்கு இஸ்லாமியர்களும் . இந்துக்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

ஆடுகள் அனைத்தும் கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன ஒரு ஆடு சுமார் 5000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டின் எடை ஏற்றார்போல் விலையும் நிர்ணயிக்கப்பட்டது . இஸ்லாமியர்கள் செம்மறி ஆடுகளை வாங்கி சென்றனர். இந்துக்கள் வெள்ளாடுகளை வாங்கி சென்றனர். அதிலும் வெள்ளாடுகளில் கருப்பு ஆடுகளை அதிக விலை கொடுத்து இந்துக்கள் வாங்கி சென்றனர். இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு சந்தையில் 50 லட்ச ரூபாய் முதல் 80 லட்ச ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
பொட்டுக்கடலை..தினமும் ஒரு கைப்பிடி சாப்டுங்க..!அவ்ளோ நன்மைகள் இருக்கு அதுல!