சமூக ஒற்றுமை பேணும் மீன்பிடி திருவிழா- ஏராளமானோர் பங்கேற்பு

சமூக ஒற்றுமை பேணும் மீன்பிடி திருவிழா- ஏராளமானோர் பங்கேற்பு
X

திண்டுக்கல் அருகே சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள புகையிலைப்பட்டியில் வலைபிடிச்சான் குளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இக்குளம் வறண்டு கிடந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் தண்ணீர் வற்றியதால் இன்று ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

பரந்து விரிந்த இக்கண்மாயில் முழங்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. கண்மாய்கரையில் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை மற்றும் கச்சாவால் மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 1 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டன. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!