திண்டுக்கல்: வீட்டுக்குள் புகுந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

திண்டுக்கல்: வீட்டுக்குள் புகுந்த  சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
X
மழைக்காலம் என்பதால்வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட கோபால் நகர்ப்பகுதியில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி கோபால் நகர் பகுதியில் உள்ள மல்லிகை தெருவில் வசித்து வருபவர் மலர்மன்னன்.இவர் வீட்டிற்கு அருகே புதர்மண்டிய காலியிடம் உள்ளது,

இந்தப் பகுதியிலிருந்து இன்று மதிய வேளையில் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. மலர்மன்னன் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர், அது சாரைப்பாம்பு வகையைச் சேர்ந்தது 4 அடி நீளம் உடையதாக இருந்தது. பிடிபட்ட சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் வனத்துறை வசம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அந்தப் பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் திண்டுக்கல் பகுதிகளில் அவ்வப்போது வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விடுகின்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story