பிரபல நகைக்கடைக்கு சீல் வைப்பு

பிரபல நகைக்கடைக்கு சீல் வைப்பு
X
திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் பிரபல நகை கடைக்கு சீல் வைப்பு -கொரோனா தடுப்பு நடவடிக்கை.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஆணையரின் ஆணைக்கிணங்கநகர் நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பிரபல ஜுவல்லரி சீல் வைக்கப்பட்டது. மேலும் எலெக்ட்ரிக்கல்ஸ் கடை மற்றும் மொபைல் விற்பனை மையம் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இப்பணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!